காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதன்படி, குறித்த பாடசாலைகள் நாளைய (11) தினம் ஆரம்பிக்கப்படுமென தென் மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
சீரற்ற வானிலை காரணமாக மாத்தறை மாவட்ட பாடசாலைகள் 5 ஆம் திகதி முதல் மூடப்பட்டன.
அத்துடன், காலி மாவட்ட பாடசாலைகள் நேற்று (09) மற்றும் இன்று(10) ஆகிய இறுதினங்களில் மூடப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டது.
தென் மாகாணத்தில் மழை குறைவடைந்துள்ள நிலையில், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.