இலங்கை அரசாங்கம் பரிசீலித்து வரும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், நிகழ்நிலை காப்பு சட்டமூலங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த இரண்டு உத்தேச சட்டமூலங்கள் ஊடாகவும் அதிகாரிகளுக்கு விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலங்கள் சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு ஏற்புடையவையாக இல்லை என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் ஊடகப்பேச்சாளர் ராவின் ஷம்டாசனி தெரிவித்துள்ளார்.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், நிகழ்நிலை காப்பு சட்டமூலங்கள் கருத்து சுதந்திரம், அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமைகளை மட்டுப்படுத்துகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.