தற்போது மிகமோசமான முறையில் நடந்துகொண்டிருக்கின்ற இஸ்ரேல் பலஸ்தீன் யுத்தம் தொடர்பில் மேற்குல நாடுகளும் இந்திய அரசு சார்ந்த ஊடகங்களும் பலஸ்தீன் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றன.
ஆனால் இந்தியாவின் தலைவர்கள் ஆரம்பகாலம் முதல் பலஸ்தீனுக்கு ஆதரவாகவே இருந்தார்கள் என்பதை காட்டுகின்ற ஒரு செய்திக்குறிப்பை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.
இங்கிலாந்து எப்படி ஆங்கிலேயருக்குச் சொந்தமானதோ பிரான்ஸ் எப்படி பிரெஞ்சுக்காரர்களுக்கு சொந்தமானதோ அவ்வாறுதான் பலஸ்தீனம் அரேபியர்களுக்கு சொந்தம்.
அரேபியர்கள் மீது யூதர்களைத் திணிப்பது தவறானது என்பதோடு மனிதாபிமானமற்ற செயலுமாகும். பலஸ்தீனத்தில் இன்று நடக்கும் விடயங்களை எந்தவொரு தார்மீகவாதியாலும் நியாப்படுத்த முடியாது பலஸ்தீனத்தின் ஒரு பகுதியையோ அல்லது அதனை முழுமையாகவோ யூதர்கள் தங்கள் வசமாக்கிக் கொள்ள வைத்துவிட்டு பெருமைக்குரிய அரேபியர்களை சிறுமைப்படுத்துவது நிச்சயம் மனிதகுலத்துக்கு எதிரான குற்றமாக தொடர்ந்து நீடிக்கும்.
மகாத்மா காந்தி -ஹரிஜன் இதழ் -1938