அல்-ஹாஜ் கலாநிதி ஹஸன் மௌலானா ஐக்கிய நாடுகளின் சமாதான தூதுவர்கள் பேரவையின் உறுப்பினராக நியமனம்!

Date:

இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் முஸ்லிம் விவகார சமய தலைவர், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் அங்கத்தவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச சமாதான மாநாடு 2023 கடந்த 03ம் திகதி ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையால் (UNPAF) பண்டாரநாயக்க ஞாபககார்த்தத சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் தெற்கு ஆசிய செயலாளர் கலாநிதி ஹமிட் ஸைடின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது  அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் அங்கத்தவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமன சான்றிதழை ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் தெற்கு ஆசிய பிராந்திய சமாதான தூதுவர், பேராசிரியர். டாக்டர். ஜி. ஜெகப் ஸைமன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சமயத்தலைவர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவுக்கான இணைப்பாளர் கலாநிதி தேசமான்ய கெளரவ கே.ஏ.எஸ்.எம்.கே. ரத்நாயக்க உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...