இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் போரைத் தாண்டி ‘பயங்கரவாதமாக’ மாறிவிட்டது: பிரான்சிஸ் போப் ஆண்டகை

Date:

காஸாவில் பணயக் கைதிகளாக இருக்கும் இஸ்ரேலிய உறவினர்களை திருத்தந்தை பிரான்சிஸ் போப் ஆண்டகை தனித்தனியாக சந்தித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஆராதனைக்குப் பிறகு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காஸா பகுதியில் நிலவும் மோதல்களால் இரு தரப்பினரும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தமக்கு நன்றாகவே புரிகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் போப் கூறியுள்ளார்

மேலும், காஸா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான மோதல் போரைத் தாண்டி பயங்கரவாதமாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

போரை தாண்டி நாம் சென்றுவிட்டோம். இனி எப்போதும் இது போராக இருக்க முடியாது. இது பயங்கரவாதம்.

அமைதியை நோக்கிச் செல்ல எங்களுக்கு உதவுங்கள், அமைதிக்காக பிரார்த்தனை செய்யுங்கள்,  அமைதி நிலவ வேண்டும் என்று வேண்டிக்கொள்வதாகவும், அனைவரையும் கொல்ல வேண்டும் என்ற பயங்கரவாத எண்ணத்தை விட்டொழிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பீட்டர்ஸ் சதுக்கத்தில் பலஸ்தீன தேசிய கொடிகளை ஏந்தியும், மனிதப்படுகொலை யை எடுத்துரைக்கும் காஸா போர்க் காட்சிகள் கொண்ட பதாகைகளையும் பலரும் ஏந்தியிருந்தனர்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...