நிவாரண பணியகத்தின் 31வது நிவாரண விமானம் காஸாவுக்கு சென்றுள்ளதாக saudi press agency அறிவித்துள்ளது.
சவூதி பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒருங்கிணைப்புடன் மன்னர் சல்மான் நிவாரண மையம் அனுப்பியுள்ளது.
இன்று எகிப்து அரபுக் குடியரசில் உள்ள எல்-அரிஷ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக சவுதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காசா பகுதிக்குள் பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களுக்கு அவற்றை எடுத்துச் செல்வதற்காக விமானம் இரண்டு ஆம்புலன்ஸ்களை ஏற்றிச் சென்றது.
பலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக நிதி திரட்டும் பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்த உதவி வருகிறது.
நெருக்கடி காலங்களில் பலஸ்தீன மக்களுடன் இணைந்து நிற்கும் சவூதி அரேபியாவின் நீண்டகால உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது.