தாருல் ஈமான் அனாதை மாணவர்களுக்கான நிலையத்தை உரிய தரப்பிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பு!

Date:

சம்மாந்துறை தாருல் ஈமான் அநாதை மாணவர் கல்லூரி அதனை நிறுவிய பரகஹதெனிய அன்ஸாருஸ் ஸுன்னாவுக்குரியது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சம்மாந்துறை கிழக்கு வாழ் முஸ்லிம்களின் முகப்பு நகரமாகும்.  ஆலிம் உலமாக்கள், படித்த புத்தஜீவிகள், சமூக ஆர்வலவர்கள், அரசியல் பிரமுகர்கள் , பாராளுமன்ற எம்.பிக்கள்,புரவலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆய்வாளர்கள், கலைஞர்கள், இலக்கிய வாதிகள், ஹஜ் உம்ரா கடமை நிறைவேற்றியவர்கள், ஆன்மிகவாதிகள், வயல்நிலபுல உரிமையாளர்கள், வியாபாரிகள், பண்பாளர்கள் எனப் பல்வேறுபட்ட துறை சார் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கின் முன்னோடி கிராமங்களில் ஒரு கிராமமாகும்.

இரக்கம் பாசம், அன்பு, ஈகை போன்ற மானுட உயர் பண்புகளால் நிரம்பிய, கிழக்கின் மூத்த நகரமான சம்மாந்துறை நகர மண்ணில்தான் பெரிய ஹஸ்ரத் என ஊர்மக்களால் பாசமாக அழைக்கப்படும் சமூக சீர்திருத்த வாதியாக மதிக்கப்படும் அலியார் ஹஸரத் என்ற சுன்னாவை நேசிக்கும் ஒரு நல்ல மனிதர் வாழ்ந்து மரணித்தார் என்பது அந்நகரின் புகழ் மேலும் உயர்வடைடையக் காரணமாகின்றது.

இத்துணை பெருமைக்கும் மாண்புகளுக்கும் உரிய இக்கிராமத்தில்தான் அநாதை மாணவர்களின் மேற்படி கல்வி நிர்வனமும் அமைந்துள்ளது.

தாருல் ஈமானை ஸ்தாபித்த அமைப்பு?

இலங்கையில் முன்னோடி சமூக சேவை நிறுவனமான ஜம்இய்யத்து அன்ஸாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா (JASM ) என்ற பழமையான அமைப்பே மேற்படி நிலையத்தை நிறுவி நிர்வகித்து வந்தது.

இவ்வமைப்பானது, அநாதைகள், விதவைகள், பொறியியல் மற்றும் வைத்திய துறை மாணவ மாணவியருக்கான புலமைப் பரிசில் உதவிகள், அரபுக் கல்லூரிகள், அநாதை நிலையங்கள், கல்வி நிலையங்கள் நிறுவுதல், வெள்ள மற்றும் அணர்த்த , வரட்சிகால உதவிகள் எனப் பல்வேறு சமூக சேவைகள் செய்து நாட்டாலும் அரபு நாடுகளிலும் நம்பிக்கை நிர்வனம் என்ற பெயரைத் தாங்கிய அமைப்பாகும் .

அதன் சேவையின் தொடரில்தான் தாருல் ஈமான் நிலையமானது பிரதேசத்தில் உள்ள
அநாதை மற்றும் வறிய மாணவர்களின் எதிர்கால கல்வி நலனைக் கவனத்தில் கொண்டு 2013 ம் ஆண்டு குவைத் நாட்டின் நிதி உதவியுடன் சுமார்
15 கோடி செலவு மதிப்பில் சம்மாந்துறை மண்ணில் கட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.

அங்கிருந்து இதுவரை கற்கை நெறியைப் பூர்த்தி செய்து வெளியேறிய 36 மாணவர்களில் 16 மாணவர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைத் தொடரும் அதே நேரத்தில்,மற்ற மாணவர்களும் அல்லாஹ்வின் அருளால் நல்ல நிலையில் இருப்பது
மகிழ்ச்சிக்குரிய செய்தியுமாகும்.
அநாதைகளின் சொத்தை அபகரிக்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. பயங்கரவாதியான ஸஹ்ரானின் உச்ச கட்ட மடத்தனத்தால் நிகழ்ந்த 2019- தாக்குதலால் இலங்கைவாழ் முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கிய பிரச்சனைகள் பல நூறு என்பதையும் அதன் பின்னணியில் இஸ்லாமிய இயக்கங்கள் பல அநியாயமாக தடை செய்யப்பட்டன என்பதையும் நாம் அறிவோம்.

அந்த அமைப்புக்களில் ஒன்றாக பரகஹதெனிய அன்ஸாருஸ் ஸுன்னா என்ற சமூக அமைப்பும் துரதிர்ஷ்டவசமாக தடை செய்யப்பட்டது.

அதனால் அதன் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த அனைத்து கல்வி நிருவனங்களும் அரச வர்த்தமானிக்கு மதிப்பளித்து மூடப்பட்டன.

குறித்த வர்த்தமானியை சவாலுக்கு உட்படுத்தி தாம் பயங்கரவாத அமைப்பு அல்ல என்பதை விளக்கி தம்மீது போடப்பட்ட தடையை நீக்கக் கோரும் உயர் நீதிமன்ற ஆணையைப் பெறும் பொருட்டு கொழும்பு உயர் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு
நிலுவையில் இருந்து வந்த நிலையில் அமுலில் இருந்து வந்த அரச தடையும் நீக்கப்பட்டது.
அநாதை நிலையம் அமைக்க அன்ஸாருஸ்ஸுன்னா நிர்வனத்திற்கு காணி உறுதிப்பத்திரத்தை வழங்கி, அதனோடு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் விலக்கிக் கொண்டதாக உறுதியளித்த சம்மாந்துறை மௌலவி ஒருவர் இஸ்லாமிய அமைப்புக்களின் தடைக் காலத்தைப் பயன்படுத்தி குறித்த அநாதை நிலையக் காணி தனக்குரியது என்ற போலியான வாதத்தை முன்வைத்து வலுவற்ற ஆதாரத்தின் அடிப்படையில் (நம்பிக்கைத் துரோகமாக) அப்போதுதான்
உறக்கத்தில் இருந்து விழித்தவன் போல கல்லூரி பாதுகாவலரிடம் பிரதம நுழைவாயிலின் திறப்பைக் கேட்டும் அவரால் அது மறுக்கப்பட்டதை அடைத்து
நுழைவாயிலின் பூட்டை உடைத்து உள்நுழைந்ததையும், கல்லூரி கட்டட சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த பரகஹதெனிய நிர்வனத்தின் ஆதாரப்பூர்வமான பெயர் பதாதைகளை அகற்றியதையும் அநாதைகளின் சொத்தை அபகரித்ததை
எதிர்த்தும் சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு செய்து தொடரப்பட்ட வழக்கின் இறுதித் தீர்ப்பு சம்மாந்துறை நீதிமன்ற கௌரவ நீதிபதி அவர்களால் 16/11/2023 அன்று குறித்த கல்லூரியானது அன்ஸாருஸ் ஸுன்னாவிற்குரியது என்ற திருப்திகரமான தீர்ப்பு வழங்கப்பட்டு அநாதைச் சொத்தில் அத்துமீறியவரின் நியாயமற்ற வாதங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
அல்லாஹ்வின் உதவியால் வரும் கல்வியாண்டில் இயக்குவதற்கான சகல முயற்சிகளையும் பரகஹதெனிய அன்ஸாருஸ்ஸுன்னா நிர்வாகம் செய்து வருகின்றது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது.

வரும் காலங்களிலும் இக்கல்லூரி மாணவர்கள் நல்லபல சாதனைகள் புரிய அல்லாஹ் பேரருள் செய்வானாக!!! ஆமீன்.

ஆக்கம்: எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...