தனியார் துறையினருக்கு அடிப்படை சம்பளம் ரூ.21,000 ஆக அதிகரிக்க தொழில் அமைச்சு முன்மொழிவு!

Date:

தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை 12,500 ரூபாவிலிருந்து 21,000 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் திறந்த மற்றும் பொறுப்புடைமை அரசாங்கம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு தொழில் அமைச்சிடம் இருந்து இது தொடர்பான முன்மொழிவு கிடைக்கப்பெற்றுள்ளது.

தனியார் துறை ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை தற்போது தீவிரமாக எழுப்பப்பட்டுள்ளதாகக் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியதுடன், தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதில் தொழிலாளர் அமைச்சின் தலையீடு எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது குறித்தும் விவரித்துள்ளார்.

தொழில் அமைச்சின் அதிகாரிகள் கருத்து வெளியிடுகையில், தனியார் துறையில் சம்பளம் பெறும் சுமார் 3 மில்லியன் ஊழியர்கள் மட்டுமே தொழிலாளர் சட்டத்தின் கீழ் உள்ளனர்.

மேலும் தனியார் துறையின் குறைந்தபட்ச ஊதியத்தை 12,500 ரூபாயில் இருந்து 21,000 ரூபாயாக உயர்த்த தொழில் அமைச்சு முன்மொழிந்துள்ளது எனக் கூறியுள்ளார்.

அத்துடன், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1,000 ரூபாயில் இருந்து 1,700 ரூபாவாக அதிகரிக்க தொழில் அமைச்சு முன்மொழிந்துள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

டெங்கு அபாயம் அதிகமுள்ள வலயங்களை இலக்காகக் கொண்டு இன்று (06) விசேட...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...