76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுயதொழிலுக்கான உதவிகள் வழங்கி வைப்பு!

Date:

சுதந்திரமான தேசத்தில் சுதந்திர பிரஜைகளாக வாழ்வதற்கு பொருளாதார சுதந்திரம் இன்றியமையாததாகும்.

அதற்கமைய  இன்று 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அல்ஹிமா சமூக சேவை நிறுவனத்தின் ஆதரவில் குவைத்திலுள்ள நமா சமூக சேவை நிறுவனத்தின் உதவியோடு வவுனியா வாழவைத்த குளம் பகுதியில் அமைந்துள்ள அல் பழாலா கல்வி நிறுவன வளாகத்தில் சுயதொழில் செய்வோருக்கான உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது வடமாகாணத்தில் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மன்னார் ஆகிய பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5 குடும்பங்களுக்கான சுயதொழில் செய்வதற்கான உணவு வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வை அல்ஹிமா சமூக சேவை நிறுவனத்தின் தலைவரும் பிரபல சமூக சேவையாளருமான அஷ்ஷெய்க் எம்.ஏ.எம் நூருல்லா அவர்கள் கலந்துகொண்டு வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி...

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...