உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Date:

இலங்கையில் பதிவாகும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் அமைப்பின் சமூக மருத்துவ நிபுணர் ஷெரில் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய 18 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 35 சதவீத உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் மே 17 ஆம் திகதி உயர் இரத்த அழுத்தம் மற்றும் மே மூன்றாவது வாரத்தில், உப்பு பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலகளவில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

உயர் இரத்த அழுத்த அபாயத்தைத் தடுப்பது குறித்து சமூக மருத்துவ நிபுணர் ஷெரில் பாலசிங்கம் மேலும் கருத்து தெரிவிகையில்,

“முக்கியமாக, ஆரோக்கியமாக சாப்பிடுவது மிகவும் முக்கியம், குறிப்பாக உப்பின் பயன்பாட்டை முடிந்தவரை குறைப்பது மிகவும் முக்கியம்.

மேலும், உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியம்.

புகையிலை மற்றும் மதுபானங்களை தவிர்ப்பதாலும் உயர் இரத்த அழுத்தம் வராமல் தடுக்க முடியும் என்றார் .

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...