பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாத மாணவர்களுக்கு மத்திய வங்கியின் விசேட செயற்திட்டம்

Date:

2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து அரசாங்கப் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவதற்குப் போதிய புள்ளிகளைப் பெறாத மாணவர்களுக்கான தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பெறுவதற்கான கடன் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், இதுவரை வழங்கப்பட்ட கடன் தொகையிலும் பார்க்க தற்போது குறித்த தொகை பதினைந்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடன் தொகையை வழங்குவதற்கான ஏற்பாடுகளை தற்போது இலங்கை மத்திய வங்கி மேற்கொண்டுள்ளது.

உயர்தரப் பரீட்சையில் மூன்று முறைக்கு மிகாமல் சித்தியடைந்த மாணவர்கள் மட்டுமே இந்தக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்தக் கடன் வட்டியில்லாதது மற்றும் பட்டப்படிப்புக்குப் பிறகு ஒரு வருட சலுகைக் காலத்திற்குப் பிறகு திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...