2024 ஜனாதிபதி தேர்தல்: நாளை ஆரம்பமாகவுள்ள தபால் மூல வாக்களிப்பு

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை (04) முதல் ஆரம்பமாகவுள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கு 7 இலட்சத்து 12,319 தபால்மூல வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குருநாகல்  மாவட்டத்தில் அதிகூடிய வாக்காளர்களாக 76 ஆயிரத்து 977 பேர் தகுதி பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் மாவட்டச் செயலக அலுவலகங்கள், தேர்தல் ஆணைக்குழு அலுவலகங்கள், சிரேஷ்ட மற்றும் பிரதி காவல்துறை மா அதிபர் அலுவலகங்கள், காவல்துறை அத்தியட்சகர் மற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் அலுவலகங்கள், காவல்துறை நிலையங்கள், சிறப்பு அதிரடிப் படை முகாம்கள், சிறப்பு காவல்துறை பிரிவுகள் மற்றும் உயரடுக்கு பாதுகாப்புப் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நாளை தபால் மூலம் தனது வாக்கினை அடையாளப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நாளைய தினத்திற்கு மேலதிகமாக குறித்த இடங்களில் 6ஆம் திகதியும் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ள ஊழியர்களுக்கான தபால் மூல வாக்குப்பதிவு செப்டெம்பர் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

தபால் மூல வாக்குகளை குறித்த திகதிகளில் அடையாளப்படுத்த முடியாத தபால் வாக்காளர்கள், தாங்கள் பணிபுரியும் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களில், எதிர்வரும், 11, 12ஆம் திகதிகளில், தபால் வாக்குகளை அடையாளப்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...