‘ஆபத்தான ஆயுதங்களை காசாவில் பயன்படுத்தலாம்’; இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்திய பிரித்தானியா

Date:

இஸ்ரேலிற்கு விதிக்கப்பட்ட இராணுவ உபகரணங்களுக்கான உரிமங்களை பிரித்தானியா இடைநிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறும் வகையில், ஆபத்தான ஆயுதங்களை காசாவில் பயன்படுத்தலாம் என்ற அச்சத்தில் இந்த நடவடிக்கை ஒன்றை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, காசா போர் தொடர்பில் இஸ்ரேலின் ஆயுத உரிமங்களை பிரித்தானியா இடைநிறுத்தியுள்ளதாக, வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இஸ்ரேலுக்கான 350 ஆயுத ஏற்றுமதி உரிமங்களில் 30 உரிமங்களை பிரித்தானியா இடைநிறுத்துகின்றது.

இவ்வாறு தடைசெய்யப்பட்ட பொருட்களில் போர் விமானங்கள், உலங்குவானுர்திகள் மற்றும் ஆளில்லா விமானங்களுக்கான பாகங்களும் அடங்கும்.

இதுபோன்ற மோதலை எதிர்கொள்ளும்போது, ஏற்றுமதி உரிமங்களை மறுபரிசீலனை செய்வது இந்த அரசாங்கத்தின் சட்டப்பூர்வ கடமையாகும்” என தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து இஸ்ரேலின் பாதுகாப்பு மந்திரி Yoav Gallant இந்த நடவடிக்கையால் தான் “ஆழ்ந்த மனமுடைந்து” இருப்பதாகத் தனது சமூகவலைத்தளத்தில்  பதிவிட்டுள்ளார்.

Popular

More like this
Related

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் அனாதை இல்லத்திற்கு விஜயம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் 2025.10.5 திகதி...