தேசிய ஷூரா சபையினால் முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்புகள் அடங்கிய மகஜர் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கையளிப்பு

Date:

இலங்கை முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய ஷூரா சபை , எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களிடம் எதிர்பார்க்கப்படும் விடயங்கள் தொடர்பிலான முன்மொழிவுகளை தயாரித்து அனைத்து முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் கையளித்து வருகிறது.

இந்தத் தொடரில் கடந்த செவ்வாயன்று (10) தேசிய மக்கள் சக்திக்கு (NPP) இந்த முன்மொழிவுகளை வழங்கும் நிகழ்வு பத்தரமுல்லையில் உள்ள NPP தலைமையகத்தில் நடைபெற்றது.

ஷூரா சபையின் முன்மொழிவுகளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் NPP செயற்குழுவின் முக்கியஸ்தருமான கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷவிடம் அவரது அலுவலகத்தில் வைத்து இந்த முன்மொழிவு கையளிக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை அவரது அலுவலகத்தில் சந்தித்த தேசிய ஷூரா சபை பிரதிநிதிகள், நேரடியாக அவரிடம் முன்மொழிவுகளை சமர்ப்பித்தனர்.

தேசிய ஷூரா சபை தயாரித்துள்ள இந்த முன்மொழிவுகளை இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற ஏனைய முக்கிய வேட்பாளர்களுக்கும் கையளிப்பதற்கு தேசிய ஷூரா சபை ஏற்பாடு செய்து வருகிறது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக முஸ்லிம் சமூகத்தின் குரல் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் ஏத்தி வைக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் தேசிய ஷூரா சபை செயற்பட்டு வருகிறது.

இம்மாதம் 14 ஆம் தேதிக்குள் இந்த முன்மொழிவுகள் தொடர்பிலான எழுத்து மூலமான பதில் கிடைத்தால் 21 ஆம் தேதிய தேர்தலுக்கு முன்னர் அதனை முஸ்லிம் சமூகத்தின் முன் வைப்பதற்கு தாம் தயாராக இருப்பதாக தேசிய ஷூரா சபை ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முன்வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 COMMENT

  1. මාෂා අල්ලාහ් සූරාසභාව මස්ලිම් ජාතියේ අයිතිවාසිකම් දිනාගැනීමට ගත් තීරණය මම අගය කරමි මේ මොහොතේ මෙවන් කොන්දේශියක් ඉදිරිපත් කරීමට ඔබලාගේ හදවතට දිරි දුන් අල්ලාහ්ටයි මාගේතුතිය අල්හම්දුලිල්ලාහ්.
    ඉන්ෂා අල්ලාහ් මේරටට අනාගතේ හොඳ පාලනයක් ලැබේවි.

Comments are closed.

Popular

More like this
Related

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலை குறைப்பு

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலைகளின் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒளடத...

வெலிமடை மத்ரஸா மாணவன் மரணம்: நீதி கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

வெலிமடைப் பகுதியில் 12 வயதுடைய சிறுவன் ஒருவர் சந்தேகத்துக்கிடமான  நிலையில் மரணமடைந்ததை...

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை- அமெரிக்காவுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் நேற்று (14) இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான...

2026 பாடசாலை பரீட்சைகள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கை!

2026 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பாடசாலை பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பை கல்வி,...