பரீட்சைகள் தொடர்பாக கல்வி அமைச்சரின் அறிவிப்பு

Date:

அடுத்த வருடம் முதல் அனைத்து பரீட்சைகளும் தாமதமின்றி நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் சீருடை, பாடப்புத்தகம் என அனைத்தும் இப்போதே தயாராகிவிட்டன, 2025 ஜனவரி 2 ஆம் திகதி பாடசாலை தவணை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மூன்றாவது தவணை இரண்டு வாரங்களுக்கு நடத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, ஜனவரி 20ஆம் திகதி முதல் தவணை ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கல்விப் பொதுத் தராதர பரீட்சை பெறுபேறுகளும் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...