தேர்தல் காலங்களில் நல்லமல்களில் ஈடுபட்டு துஆ கேட்குமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

Date:

தேர்தல் நடக்கும் ந்தக் காலகட்டத்தில், நமது தாய்நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்காகவும், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும் துஆ இறைஞ்சுமாறும் இறைவனின் உதவியை ஈர்க்கக் கூடிய நல்லமல்களில் ஈடுபடுமாறும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா முஸ்லீம் சமூகத்துக்கு வழிகாட்டல் வழங்கியுள்ளது.

21.09.2024 அன்று நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பின்வரும் வழிகாட்டல்களை கடைப்பிடிக்குமாறு இலங்கை முஸ்லிம்களை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா (ACJU) கேட்டுக்கொள்கிறது.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா 100 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் சமூக மற்றும் சமய செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஒரு மத மற்றும் சமூக வழிகாட்டல் அமைப்பாகும். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா எந்த வேட்பாளரையோ அல்லது அரசியல் கட்சியையோ ஆதரிப்பதோ அல்லது எதிர்ப்பதோ கிடையாது.

இந்த காலகட்டத்தில், நமது தாய்நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்காகவும், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும் ஆர்வத்துடன் பிரார்த்தனை செய்வதோடு இறைவனின் உதவியை ஈர்க்கும் நல்ல செயல்களிலும் ஈடுபடுவோம்.

ஒரு ஜனநாயக நாட்டில், தேர்தலில் போட்டியிடுவதற்கும், எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், அவர்கள் விரும்பும் வேட்பாளரை ஆதரிப்பதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு. பொறுப்புள்ள குடிமக்கள் என்ற வகையில், தேர்தல் செயல்பாட்டின் போது ஜனநாயகத்தையும் நாகரிக விழுமியங்களையும் நிலைநிறுத்துவதை உறுதிசெய்வதோடு சிந்தித்து தமது வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த வேண்டும்.

குறிப்பாக தேர்தல் காலங்களில் பேச்சாக இருந்தாலும் செயலாக இருந்தாலும் அனைத்து வகையான குற்றச் செயல்களில் இருந்தும் நாம் விலகி இருக்க வேண்டும். வதந்திகளைப் பரப்புதல், வதந்திகள் பேசுதல், சண்டை மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபடுதல் போன்ற நமது ஈமானைப் பாதிக்கும் தீங்கு விளைவிக்கும் நடத்தைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

உலமாக்கள் பள்ளிவாசல்களின் மிம்பர்களில் எந்தவொரு வேட்பாளருக்கும் அல்லது அரசியல் கட்சிக்கும் ஆதரவு தெரிவிப்பதையோ வையோ அல்லது எதிர்ப்பதையோ கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். மேற்கூறிய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற பொதுமக்களுக்கு வழிகாட்டவும் வேண்டும்.

பள்ளிவாசல்கள் தேர்தல் பிரச்சாரங்களுக்கோ அது தொடர்பான செயல்பாடுகளுக்கோ பயன்படுத்தப்படக் கூடாது. தேர்தல் முடிந்தவுடன் அமைதியாகவும் அடக்கமாகவும் இருப்பது முக்கியம். ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிப்பதன் மூலம் முஸ்லிம் சமூகம் எப்போதும் நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

முஸ்லிம்களாகிய நாம், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் இறைவனின் நாட்டப்படியும் திட்டத்தின்படியுமே நடக்கிறது என்று உறுதியாக நம்புகிறோம். தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அது இறைவனின் ஆணையால்தான் என்பதை பொறுமையோடும் புரிந்துணர்வோடும் ஏற்றுக் கொள்வது நமது பொறுப்பாகும்.

மேற்கண்ட அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப பொது மக்களுக்கு வழிகாட்டுமாறு உலமாக்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், குறிப்பாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் மாவட்ட மற்றும் பிரதேச கிளைகளின் உறுப்பினர்களை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கேட்டுக்கொள்கிறது.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை.

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும்...

இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துமாறு போராட்டம்!

2027ஆம் ஆண்டு வரை இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்ததை உடனடியாக...

கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக சீனா சென்ற கனடா பிரதமர்!

சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்கை கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று...

ஜனாதிபதி தலைமையில் வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய வீட்டு வசதி திட்டம்

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ்,...