ஓய்வூதியத்தினை இழந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

Date:

நாடாளுமன்றம் முன்கூட்டி கலைக்கப்பட்டதன் காரணமாக 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஓய்வூதியத்தினை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நாடாளுமன்ற கலைக்கப்பட்டு வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 85 பேர் ஓய்வூதியத்தினை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 ஆவது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில் குறித்த காலம் நிறைவடைவதற்கு முன்னதாக முன்கூட்டி கலைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் உறுப்பினர் ஒருவருக்கு அவரது சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு ஓய்வூதியமாக வழங்கப்படுகின்றது.

மேலும் 10 ஆண்டுகளை நிறைவு செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஓய்வூதியம் பெறுவதற்கு உரித்துடையவர்.

1977 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க ஓய்வூதிய சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு உரித்துடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் நாடாளும்னறம் கலைக்கப்பட்டதன் காரணமாக குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் ஏனைய வரப்பிரசாதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...