மக்கள் மீதான சுமையை குறைப்பதாக அநுர உறுதி

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை அடைவதற்கும் மக்கள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும் மாற்றுத் தீர்வுகள் குறித்து கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க  உறுதிப்படுத்தினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர் ப்ரூயர் உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவினர் நேற்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன, கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களான பேராசிரியர் அனில் ஜயந்த மற்றும் துமிந்த ஹுலங்கமுவ உள்ளிட்ட இலங்கை பிரதான அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த சந்திப்பில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைக்க இடையில் செயற்படுத்தப்படும் தற்போதைய திட்டம் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் நோக்கங்களுடன் கொள்கையளவில் அரசாங்கத்தின் பரந்த உடன்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய ஜனாதிபதி, மக்கள் மீதான சுமையை அகற்றும் மாற்று வழிகளின் ஊடாக அந்த நோக்கங்களை அணுகுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

அதிக வற் வரி மற்றும் வருமான வரியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் இலக்குகளை அடைவதற்கான தற்போதைய ஜனாதிபதியின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், இலங்கை அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட மாற்று அணுகுமுறைகள் குறித்து கலந்துரையாடுவதற்கும் உடன்பட்டனர்.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான வேலைத்திட்டத்தின் மூன்றாவது மீளாய்வை ஆரம்பிப்பது தொடர்பில் இரு தரப்பினரும் கவனம் செலுத்தியதோடு, எதிர்வரும் பொதுத் தேர்தல் காரணமாக சில தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ள போதும் தடையின்றி இந்தப் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக சர்வதேச நாணய நிதியத்திடம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார்.

Popular

More like this
Related

முஸ்லிம் காங்கிரஸின் எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்....

ராஜிதவின் வழக்கு விசாரணை – மேலதிக சாட்சியப் பதிவு நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல்...

ஏர்பஸ் ஒப்பந்த ஊழல்; நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிட அறிவுறுத்தல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான ஏர்பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

சவூதி அரேபியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டத்து இளவரசரின் ஒட்டகத் திருவிழா நிறைவு!

சவூதி அரேபியாவின் தாயிஃப் (Taif) வரலாற்றுச் சிறப்புமிக்க ஒட்டகப் பந்தய மைதானத்தில்,...