புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம்; சுயாதீன குழு அறிக்கை சமர்ப்பிப்பு

Date:

தரம் ஐந்து, புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களில்  ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின்  அறிக்கை, பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக  பரீட்சை திணைக்களம்  தெரிவித்துள்ளது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் மதிப்பீட்டைத்  தற்காலிகமாக நிறுத்தி, முறையான விசாரணையை நடத்துமாறு ஜனாதிபதி அநுர குமார  திஸாநாயக்க அண்மையில் உத்தரவிட்டார்.

புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடாத்துமாறு பெற்றோர்கள்  ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதால், ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

எவ்வாறாயினும், புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும்  நடத்துவதில்லையென்ற, நிபுணர் குழுவின் தீர்மானத்தில் மாற்றம் ஏற்படாதென, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர முன்னதாக தெரிவித்தார்.

எனினும், இக்குழுவின்  பரிந்துரைகளை ஆராய்வதற்காக மற்றுமொரு சுயாதீன குழுவைப் பிரதமர் அண்மையில் நியமித்திருந்தார்.

இக்குழுவின் அறிக்கையே பிரதமரிடம் தற்சமயம் கையளிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...