கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கான இணையவழி முறைமை

Date:

கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் தொடர்பான திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யக்கூடிய இணையவழி முறைமையொன்றைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடவுச் சீட்டை பெற்றுக்கொள்வதற்காக பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அருகே மக்கள் தொடர்ந்தும் நீண்ட வரிசையில் காத்திருப்பதனை அவதானிக்க முடிந்துள்ளது. நேற்றைய தினம் விடுமுறை நாளாக இருந்த போதிலும் மக்களின் வரிசை காணப்பட்டுள்ளது..

இன்றைய தினம் வெவ்வேறு பகுதிகளிலிருந்து பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்குச் சென்றிருந்த மக்கள் கடவுச் சீட்டை பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருக்கின்றனர்.

அடிப்படை சுகாதார பாதுகாப்பு வசதிகள் இன்றி வரிசையில் காத்திருப்பதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான, பின்னணியில் கடவுச் சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு நாளாந்தம் 750 முதல் 1400 வரையான டோக்கன்கள் மாத்திரமே விநியோகிக்கப்படுகின்றன.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...