வாக்களிப்பு நிலையங்களில் கடமையாற்றிய இரண்டு உத்தியோகத்தர்கள் உயிரிழப்பு

Date:

வாக்களிப்பு நிலையங்களில் கடமையாற்றிய இரண்டு உத்தியோகத்தர்கள் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இன்று (14) விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய போது அவர்  இதனை தெரிவித்தார்.

அதற்கமைய, கெஸ்பேவ வாக்களிப்பு நிலைய கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். 48 வயதான அவர் பயாகல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்.

மேலும், நிகவெரட்டிய கொபேகனே வாக்குச் சாவடியில் இன்று (14) காலை பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் (57) திடீரென உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என்று பொலிஸார்  சந்தேகிக்கின்றனர்.

அவர் சடலம் தற்போதும் அங்கேயே உள்ளதாகவும் நிக்கவேரட்டிய நீதவான் வருகையை அடுத்து சடலம் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...