”கலாதினீ” விருது பெற்றார் சிரேஷ்ட ஊடகவியலாளர் சனூன்..!

Date:

ஊடகத்துறையில் 43 வருடங்களாக சேவையாற்றி வரும் புத்தளத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.யூ எம்.சனூஸ் ‘கலாதினீ’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

புத்தளம் மாவட்ட செயலகத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் மாவட்ட சாகித்திய கலை விழா இம்முறை ஆனமடுவயின் மறைந்த கலைஞர் எழுத்தாளர் ஏ . சுந்தஹாமி ஞாபகார்த்தமாக தம்பண்ணி அக்வெஸ்ஸ என்ற மகுட வாசகத்தின் அடிப்படையில் ஆனமடுவ சுதம்பாய மண்டபத்தில் கடந்த இன்று வெள்ளிக்கிழமை (29) புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம் எஸ் பீ ஹேரத் தலைமையில் இடம்பெற்றது.

இச் சாகித்திய விழாவில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள தமிழ் மற்றும் சிங்கள மொழியில் நீண்ட நாட்களாக சேவையாற்றி வரும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான எம் யூ எம் சனூன், ஜே. ஏ.ஆர்.சீ பெர்னார்ந்துபுள்ளே, பத்மா குமாரி, ரெக்ஸ் ஹெரிஸன் பெர்னாந்து ஆகியோருடன் கலைத்துறையில் சாதனையாளர்கள் ஆகியோர் ‘கலாதினீ’விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக நிர்வாகம் மற்றும் மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...