பாடசாலை மாணவி மரணம்: ‘ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்’ என வலியுறுத்திப் போராட்டம்!

Date:

கொட்டாஞ்சேனையில் அண்மையில் தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை (08) காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டு மாணவிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த போராட்டதால் டுப்ளிகேஷன் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, உயிரிழந்த மாணவி குறித்த பாடசாலையின் ஆசிரியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகம் இருப்பதாகவும், அதன் விளைவாக மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர்.

எனவே அந்த மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதேவேளை இன்று காலை கொழும்பு கொச்சிக்கடை விவேகானந்தா வீதிக்கு முன்பாக அமைதியான முறையில் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்விக் கற்றுவந்த மாணவி ஒருவர் கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7வது மாடியில் இருந்து கீழே பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...