புத்தளத்திலும் இடமில்லை: பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியருக்கு கட்டாய லீவு

Date:

கொட்டாஞ்சேனை மாணவியின் தற்கொலைச் சம்பவம் தொடர்பான பொலிஸ் பீ அறிக்கை கிடைத்துள்ளதாகவும், அந்த அறிக்கைக்கமைய குறித்த ஆசிரியரை நிறுவன கோவைச் சட்டத்தின் பிரகாரம் கட்டாய விடுமுறையில் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான ஆரம்பக்கட்க விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதுடன் அந்த விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் முறையாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமென்று அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

இந்த ஒட்டுமொத்த சம்பவத்திலும் ஏதாவதொரு தரப்பு அவர்களின் கடமைகளை நிறைவேற்ற தவறியுள்ளார்களா என்பது தொடர்பில் தேடிப்பார்ப்பதற்கு அமைச்சினால் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Popular

More like this
Related

இலங்கை – பெலாரஸ் இடையே சுகாதாரத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கை மற்றும் பெலாரஸ் குடியரசுக்கு இடையே சுகாதார சேவை தொடர்பான புரிந்துணர்வு...

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விஞ்ஞான...

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...