கிண்ணியா நகர சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசம்: தவிசாளராக எம்.எம்.மஹ்தி தெரிவு..!

Date:

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட திருகோணமலை மாவட்டம் கிண்ணியா நகர சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தம்வசப்படுத்தியது.

இன்றைய தினம் கிண்ணியா நகர சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எம்.எம்.மஹ்தி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

பகிரங்க வாக்கெடுப்பு மூலமாக எம்.எம்.மஹ்தி தெரிவு செய்யப்பட்டதுடன் உப தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுட்பினர் அப்துல் அஸீஸ் தெரிவு செய்யப்பட்டார்.

மொத்தமாக 15 உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 04 உறுப்பினர்களும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் 04 உறுப்பினர்களும்  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் 03 உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்தி சார்பில் 02 உறுப்பினர்களும் தமிழ் தேசிய மக்கள் முண்ணனி , பொதுஜன ஐக்கிய முண்ணனி சார்பில் தலா ஒருவரும் அடங்குவர்.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...