கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

Date:

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு மண்டபம்  சனிக்கிழமை (09)  திறந்து வைக்கப்பட்டது.
நிறுவனத்தின் தவிசாளர் எஸ். அப்துல் மஜீத் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஸ்மார்ட் டைம் தங்கம் மற்றும் நகை நிறுவனத்தின் உரிமையாளர் தொழிலதிபர் அம்ரோஸ் டீன் ஜெயினுல் ஆப்தீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளீதரன், ஜாமியா நளீமியா இஸ்லாமிய கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷேக் ஏ.சி. அகார் முகம்மட் ஆகியோர் கௌரவ அதிதியாகவும் , ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் கே. தனபாலசுந்தரம், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எச். முசம்மில், கொழும்பு இன்ஃபினிட்டி ஜெம்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ.பி. அமீர்,

பெஸ்டெக் குரூப் (பிரைவேட்) லிமிடெட் தவிசாளர் ஹம்ஸா அபூசலி (ஸமிக் ஹாஜி) , அஸ்மா வூட் நிறுவனத்தின் தவிசாளர் முசாதிக் ஏ. மஜீத் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணத்திலே புற்றுநோயாளர்களை பராமரிக்கும் இந்நிலையமானது இன மத பேதமின்றி அனைத்து நோயாளர்களுக்கும் இலவசமாக சிகிச்சை, உணவு மற்றும் பராமரிப்பு என்பவற்றை வழக்கி வருகின்றது.

இப் பராமரிப்பு நிலையத்திற்கான வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள இம் மாநாட்டு மண்டபத்தை தொழிலதிபர் அம்ரோஸ் டீன் ஜெயினுல் ஆப்தீன் மற்றும் துணைவியார் புதல்வர்கள் இணைந்து திரை நீக்கம் செய்து திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.


(எம்.பஹத் ஜுனைட்)

Popular

More like this
Related

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...

வரலாற்றில் முதன்முறையாக புதிய பெண் பஸ் நடத்துனர்களுக்கு நியமனம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 20 பஸ் நடத்துனர்களுக்கான நியமனங்களை...

எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை. ஹங்கேரி பிரதமர்.

பாலின அடையாளம் மற்றும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் குறித்த விவாதத்தில், ஹங்கேரி...

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இயற்கை...