புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்துவைத்தார் ஜனாதிபதி!

Date:

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையப் புனரமைப்புப் பணிகள் இன்று திங்கட்கிழமை (15) காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம், நீண்டகால எதிர்பார்ப்புக்குப் பின்னர், தற்போது, புதிய வசதிகளை மேம்படுத்துவதற்கான புனரமைப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்படுகிறது.

இந்த பேருந்து நிலைய அபிவிருத்தித் திட்டத்துக்கு 424 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இப்பேருந்து நிலைய புதுப்பித்தலின் ஒரு பகுதியாக, புதிய கழிப்பறைகள், தகவல் தொடர்பு நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பஸ் நிலையத்தின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல விசேட அம்சங்களுடனான நவீன வசதிகள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

1964 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக புதுப்பிக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கைகள் இலங்கை விமானப்படையால் மேற்கொள்ளப்படவுள்ளன.

Popular

More like this
Related

இஸ்ரேல் ஆதரவு எம்பி-க்கு காபி வழங்க மறுப்பு: புரூக்ளின் Coffee Shop மீது அமெரிக்க நீதித்துறை அதிரடி விசாரணை!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்த யூத நாடாளுமன்ற உறுப்பினரான டான் கோல்ட்மேனுக்கு...

இலங்கையில் 50,000ஐ நெருங்கும் டெங்கு நோயாளர்கள்!

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு...

2027ஆம் ஆண்டு முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான சுற்றுநிருபம் வெளியீடு!

2027ஆம் கல்வியாண்டில் பாடசாலைகளின் முதலாம் தரத்திற்கு (Grade 1) மாணவர்களை அனுமதிப்பதற்கான...