மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவரும் புகையிலை பொருள்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டம் நேற்று முன்தினம் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் ஊடாக, தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதிக்கும் உலகின் ஒரே நாடாக மாலைதீவு ஆகியுள்ளது.
இது குறித்து மாலைதீவு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும், புகையிலை இல்லாத தலைமுறையை உருவாக்கவும் 18 வயதுக்குட்பட்டவா்கள் புகையிலை பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய விதியின்படி, 2007 ஜனவரி 1 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவா்கள் மாலைத்தீவில் புகையிலை பொருள்களை வாங்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ முடியாது. இத்தடை அனைத்து வகை புகையிலைக்கும் பொருந்தும். விற்பனையாளா்கள் வயதை உறுதிப்படுத்திய பிறகே விற்பனை செய்ய வேண்டும்.
