தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரைக்கும் சுமார் 1.5 மில்லியன் தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், அடையாள அட்டைகளை அச்சிடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எத்தகைய சூழ்நிலயிலும், தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி தொடர்ந்து வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2005ஆம் ஆண்டு பிறந்த விண்ணப்பதாரர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள், ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.
எதிர்வரும் டிசம்பர் முதல் 2006 ஆம் ஆண்டு பிறந்த பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கும் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் பணியை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்பதிவுத் திணைக்களம் கூறியுள்ளது.
