இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் இன்றையதினம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு உள்ளான கத்தோலிக்க தேவாலயங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அதன்படி, இன்று காலை கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்துக்கும், பின்னர் கட்டுவாப்பிட்டிய தேவாலயத்துக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
அத்தோடு நாளை வியாழக்கிழமை கண்டி செல்லவுள்ள அவர், அங்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த விகாரைகளுக்கு சென்று பௌத்த மதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
மேலும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலியிலுள்ள சுனாமி நினைவு தூபிக்கு செல்லவுள்ள அவர், அங்கு சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார். சனிக்கிழமை காலை அவர் நாட்டிலிருந்து புறப்படவுள்ளார்.
