உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதிக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

Date:

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதியும் மற்றும் இயக்குநருமான பிலிப் வார்டுக்கும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

2023-2027 ஆம் ஆண்டுக்கான உலக உணவுத் திட்டத்தின் மூலோபாயத் திட்டம் மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்த அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான  பிரதிநிதியும் மற்றும் இயக்குநருமான பிலிப் வார்டு  மற்றும் அரசாங்க நட்புறவு அதிகாரி  முஸ்தபா நிஹ்மத் ஆகியோர் நேற்று (04) மதியம் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்களை சுகாதார அமைச்சில் சந்தித்தனர்.

2023-2027 ஆம் ஆண்டிற்கான உலக உணவுத் திட்டத்தின் (WFP) பிரதான திட்டம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது குறிப்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கான அரசாங்கத்தின் எதிர்கால வேலைத் திட்டத்தின் அடிப்படையில்  இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கும், ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவதற்கும், அதன் மூலம் சரியான ஊட்டச்சத்துடன் ஆரோக்கியமான குடிமக்களை உருவாக்குவதற்கும் உலக உணவுத் திட்டம் தொடர்ந்து  தனது பங்களி ப்பை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவுக்கு சரியான சந்தையை உருவாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துதல், ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைத்தல் ஆகியவற்றுக்கான தேசிய முயற்சிகளுக்கு ஆதரவாக, உலக உணவுத் திட்டத் ததை (WFP) (2023-2027) செயல்படுத்துவதில் தலைமை தாங்கியதற்காக, உலக உணவுத் திட்டத்தின் (WFP) இலங்கைக்கான பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட திரு. பிலிப் வார்டுக்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்கள் நன்றி தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு வருவதால், உணவு அமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அவர் அளித்த பங்களிப்பிற்காகவும் அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

1968 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயல்பட்டு வரும் உலக உணவுத் திட்டம், பொருளாதார மற்றும் காலநிலை சவால்களை எதிர்கொள்ளும் இலங்கை மக்களின் உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிலிப் வார்ட், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து உலக உணவுத் திட்டத்தின் பணிகளைத் தொடர தேவையான ஆதரவை வழங்கியதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் சுகாதார அமைச்சருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

3ஆம் தவணைக்கான முதல் கட்டம் நாளையுடன் நிறைவு.

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...

வெலிகம பிரதேச சபைக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான தேர்தல் நவம்பர் 28!

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர்...

‘தேசிய தொழுநோய் மாநாடு’ ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்!

நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில்,...

உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் உரையாற்றிய சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் உரையாற்றினார். இந்தியாவிற்கு...