வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி நடைபெறும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
வெலிகம பிரதேச சபையின் தலைவராகப் பதவி வகித்த லசந்த விக்ரமசேகர, கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி பிரதேச சபை அலுவலக அறையினுள் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
