இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த துருக்கி

Date:

காசாவில் நடத்திய போருக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர்கள் மற்றும் அவரது அரசாங்கத்தில் உள்ள சிரேஷ்ட அதிகாரிகள் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கான பிடியாணையை துருக்கி அரசு பிறப்பித்துள்ளது.

காசாவில் திட்டமிட்டு இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவரது அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் செய்ததாக துருக்கி குற்றம் சாட்டியுள்ளது.

இதனையடுத்து, காசாவில் நடத்திய போருக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர்கள் மற்றும் அவரது அரசாங்கத்தில் உள்ள சிரேஷ்ட அதிகாரிகள் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கான பிடியாணையை துருக்கி அரசு பிறப்பித்துள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இராணுவத் தலைவ உள்ளிட்ட 37 பேருக்கு எதிராக துருக்கி அரசு இனப்படுகொலைக்கான வாரன்ட்களை பிறப்பித்துள்ளது.

துருக்கி அரசின் அறிக்கையில், காசா பகுதியில் துருக்கி அரசு கட்டிய துருக்கி – பாலஸ்தீன நட்பு வைத்தியசாலை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வைத்தியசாலை மீது மார்ச் மாதத்தில் இஸ்ரேல் குண்டு வீசியது.

துருக்கியின் இந்த அறிவிப்புக்கு இஸ்ரேல் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

இதுபற்றி இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர், “துருக்கியின் இந்த குற்றச்சாட்டுகளை உறுதியாக நிராகரிக்கிறோம், இதனை அவமதிப்பாகக் கருதுகிறேன். இந்த நடவடிக்கை கொடுங்கோலன் துருக்கி ஜனாதிபதி எர்டோகனின் சமீபத்திய மக்கள் தொடர்பு தந்திரம்.” என்று கூறினார்.

 

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...