வடக்கு, கிழக்கு பகுதிகளில் 100 மி.மீ. இற்கும் அதிக மழை

Date:

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற  தாழ் அமுக்க வலயம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதால், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்றையதினம் (17) நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பொத்துவிலிலிருந்து திருகோணமலை மற்றும் காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பம்!

சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத்...

சவூதி அரேபியாவில் பேருந்து விபத்து: உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்ட 42 இந்திய யாத்ரீகர்கள் பலி.

சவூதி அரேபியாவில் டீசல் டேங்கர் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் ...

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று தொழிற்சங்க நடவடிக்கை!

பல கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (17) காலை 8 மணி முதல்...

மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள விசேட குழு!

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மீளாய்வு செய்து,...