வெலிமடை மதரஸா மாணவன் ஸஹ்தி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக நாடு முழுவதும் பரவலான விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த அதிர்ச்சிகரச் சம்பவம், மாணவனின் குடும்பத்தினரையும் பொதுமக்களையும் துயரத்தில் ஆழ்த்தியதோடு, மதரஸாவிற்கும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் களங்கமாக மாறியுள்ளது.
இந்நிலையில், பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய முன்னெச்சரிக்கைகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டுதல்கள் குறித்து சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட ஒரு பயனுள்ள பதிவை வாசகர்களுக்காக வழங்குகிறோம்.
தாயின் மடியிலும் தந்தையின் தோளிலும் ஆன்மீகமும் லெளகீகமும் கற்க ஏதுவான வயதில், கண்ணுக்குள் வைத்து காக்க வேண்டிய பிஞ்சுப்பூக்களை கொண்டு போய் சொறிநாய்களிடம் ஒப்படைக்காதீர்.
முழு நேரம் பிக்ஹு கற்க ஏழு வயதில் என்ன அவசியம்? மார்க்கம் கற்க பகுதி நேர மத்ரஸாக்கள் இருக்கின்றன. அவற்றில் குர்ஆன் ஒதுதல் மற்றும் சிறுவருக்கான பண்பாட்டு வழிகாட்டல் அவர்களின் இவ்வயதிற்கு போதுமானது.
மார்க்க அறிஞர்கள் மற்றும் ஆலிம்களின் உருவாக்கம் என்பது எங்கள் சமூகத்தின் அடிப்படைகளில் முக்கியமான ஒன்றுதான். அவர்கள் வளர்ந்த பிறகு தனது துறை சார் கற்கையாக பிக்ஹு மற்றும் ஷரீஆ துறையை தேர்வு செய்வதே அதற்கு தகுந்தது.
வாப்பா தன் பிள்ளையை பள்ளிக்கு செல்ல உடை அணிவித்து, வாசம் பூசி, கைகளை பிடித்து அழைத்து சென்று முன் சப்fபில் தொழ வைப்பதிலிருந்து வீட்டில் சக சகோதரர்க்கிடையிலான உறவு, குடும்ப உறவு ,அயலவர் உறவு ,சமூக தொடர்பு என குடும்பமாக வழிகாட்ட பிள்ளைப் பருவத்தில் எவ்வளவு இருக்கிறது.
இருபது வருடங்கள் மத்ரஸாவில் இருந்தாலும் இது கிடைக்குமா?
இவைகளை எல்லாம் புறக்கனித்து குர்ஆனை மனமிட வேண்டும் என்பதற்காக சிலர் 10 வருடங்களுக்கும் மேல் வனவாசம் போல் சிறு வயதிலேயே பிள்ளையை மத்ரஸாவில் சேர்த்தி விடுகின்றனர் .
ஏன் குர்ஆனை மனனம் செய்வது பிள்ளைகளுக்கு மட்டுமா கடமை? அதனை கூட பிள்ளைகளோடு தாய் தந்தை நாங்களும் குடும்பமாக மனணமிடலாமே.
என்னமோ குரான் ஒதுவதும் கூட பிள்ளைப் பருவத்துக்கு மட்டுமான கடமை போல சில தந்தை மார் ஹஸரத்திடம் அடி வாங்கும் காலங்களில் கடைசியாக குர்ஆனை தொட்டு புரட்டி இருப்பர், ஆனால் பிள்ளை dடேலி ஒதவில்லை என்றால் இவர் அடிப்பர். இவர யாரு அடிக்கிற?
எப்படி தாங்கிக்கொள்வது? ஓரு தாயாக பிள்ளையை கருவில் சுமக்கும் போது எவ்வளவு கண்ணாக கவனமாக தாங்குகிறோம்.
தன் பிள்ளைக்கு சிறிது அசெளகரியம் கூட ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக
எல்லா விருப்பங்களையும் கூட இரண்டாம் பட்சமாக்கி விடுகிறோம் . நோகாமல் பார்த்துப் பார்த்து உயிர்கொடுத்து வளர்த்து விட்டு இப்படிப்பட்ட வனஜீவராசிகளின் கையில் ஒப்படைக்கலாமா?
உங்கள் பிள்ளயின் உலகுக்கும் மறுமைக்குமான எதிர்காலம் நலம் பெறவே சிறுவர் மத்ரஸா வில் சேர்த்தி விடுகிறீர் . எல்லா ஹசரத் மாறும் மூர்க்கம் கொண்டோர் இல்லை என்பீர். உண்மை.ஆனால் ஒன்றுக்கு பல மரணங்கள் இப்போது நேர்ந்துள்ளதும் எமக்குத் தெரியும்.
தனக்கு நடக்கும் ஓரு அநியாத்தை கூட பகிரங்க படுத்த தெரியாத ,எதிர்வினையாற்ற தெரியாத வயதில் அங்கு வருடக்கணக்கி கற்காத எந்த நல்வழியையும் உங்கள் பிள்ளை மத்ரஸாவில் கற்று வரப்போவதில்லை.
நீங்கள்தான் உங்கள் வீடுதான் பிள்ளைப்பருவத்தின் வதிவிட மத்ரஸா. மார்க்க அறிவு பெற, முறைப்படி குரான் ஓத, மனணம் செய்ய பகுதி நேர மத்ரஸா நன்கு போதுமானது. மிகுதி நேரம் உங்களுக்கும் பிள்ளைக்குமானது.
எங்கள் மூத்தவனுக்கு 11 வருடங்கள் இளையவனுக்கு ஒன்றரை வருடங்கள். இடையில் இன்னும் இருவர். நால்வறையும் அமர்த்தி இன்னும் நான்கு பேருக்கும் ஒரே வயதினருக்கு போல் இன்னுமும் ஊட்டி விடுகிறோம்.
“அள்ளி சாப்பிட பழக்கு வதே முறை ”என theory’s சொன்னாலும் இந்த வாய்ப்பு எங்களுக்கும் ஓருமுறைதான் அவர்களுக்கும் ஒருமுறைதான். நாங்கள் எவ்வளவு பிசியாக இருந்தாலும் இதை தவறுவதில்லை. பிள்ளைகளுக்கும் அது அளவுகடந்த மகிழ்வு.அள்ளி சாப்பிட பழக்கத்தான் school இருக்கிறதே. நான் AL படிக்கும் போது கூட உம்மா படிக்கும் இடத்துக்கே வந்து ஊட்டிவிடுவா. (மன்னித்து இரக்கம் காட்டு நாயனே)
அநேக பெற்றோர் இப்படித்தான் 10 வயதை தாண்டிய பிள்ளையை கூட இன்னும் தூக்கி கொஞ்சுகிறோம், சாப்பிட மறுத்தால் கதை சொல்லியாவது அல்லது ஏதும் deal பேசியாவது சாப்பிட வைக்கிறோம். நோய் வருத்தம் என்றால் இன்று ஈன்றெடுத்தது போல கவனிக்கிறோம் .
7,8 வயது பிள்ளைகள் கூட கொஞ்சம் தடுக்கி வலித்தால் தாய் முத்தமிட்டால் லேசாகிவிடும் என இன்னும் நம்பி ஓடி வருகின்றனர். அளவின்றி கொண்டாடுகிறோம் அவர்களின் பிஞ்சுப் பருவத்தை.
இந்த அழகிய காலங்களை வழுக்கட்டாயமாக கொன்று விடாதீர். good parenting + அறநெறி இவை இரண்டும் ஓரு குழந்தை ஏக நேரத்தில் பெற வேண்டியவை.தியாகம் என்பது மாற்று வழியின்றி இழப்பை பொருத்திக்கொள்வது அன்றி இழப்பை வரிந்துகட்டிக்கொள்வது அல்ல அன்பு என்பது எல்லோரும் ஆவல் படும் ஒன்றுதானே.
அதுவும் சிறு பிராயத்தில் தாயன்பு, தந்தை அன்பு இருவருடைய அரவணைப்பு என்ற சந்தோஷத்தை வாழ்வில் எதுவும் வந்து நிரப்பி விடாது இல்லையா? இதயமும் இதயமும் ஓரு தசை போல் இணைத்திருக்கும் இப்பருவத்தை துருவங்களில் கொண்டு போய் தனிப்படுத்த எனது மனது அனுமதிப்பதே இல்லை.
