நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க முப்படையினர் மற்றும் பொலிசார் தயார் நிலையிலிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்த நிலைமைகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு தேவையான நடவடிக்கைளை எடுப்பதற்கும் தயார் நிலையிலிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை 117 என்ற இலக்கத்திற்கு அழைத்து அனர்த்த நிலைமைகள் தொடர்பில் அறிவிதற்கும், அது குறித்து அறிவிப்பதற்கும் பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
