களனி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் அதனை அண்மித்த பகுதிகளில் வரலாற்றில் என்றுமில்லாதளவிற்கு வெள்ள அனர்த்தம் ஏற்பாடும் அபாயமுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள நேரிடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கங்கையை அண்மித்ததாக தாழ் நிலங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
