மண்சரிவினால் சேதமடைந்த 8 வைத்தியசாலைகளை வேறு இடங்களில் மீள நிறுவுவதற்கான நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட சுகாதாரத் துறையை விரைவாகக் கட்டியெழுப்புவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
அனர்த்தங்கள் காரணமாக சுகாதாரத் துறைக்கு ஏற்பட்டுள்ள சேதத்தின் மொத்த பெறுமதி 21,742 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
