40 வருட முன்பள்ளி சேவையின்பின் பெளசுல் ரூசி சனூன் ஆசிரியை ஓய்வு பெற்றார்.

Date:

-புத்தளம் எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நகரின் சிரேஷ்ட முன்பள்ளி ஆசிரியை எம்.எஸ்.எப்.பௌசுல் ரூஸி சனூன் தனது 40 வருட கால முன்பள்ளி ஆசிரியை சேவையிலிருந்து 14.01.2026 இல் ஓய்வு பெற்றார்.

புத்தளம் காஸிம் வீதியை சேர்ந்த மர்ஹூம்களான எம்.என்.எம்.மஹ்மூத் மற்றும் லில்ஹா ஆரிபா தம்பதிகளின் புதல்வியான இவர் புத்தளம் நகரின் சிரேஷ்ட ஊடகவியலாளரும், அறிவிப்பாளருமான எம்.யூ.எம். சனூன் அவர்களின் அன்புக்குரிய துணைவியும் ஆவார்.

13.05.1967 ம் ஆண்டு பிறந்த இவர் புத்தளம் சாந்த அன்றூஸ் மத்திய கல்லூரியில் சிங்களம் மொழி மூலம் கல்வி பயின்றவர்.

வடமேல் மாகாண முன்பிள்ளை பருவ கல்வி அபிவிருத்தி மன்றத்தினால் நடாத்தப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பாடநெறியில் சிங்களம் மொழி மூலமாக கலந்து கொண்டு சான்றிதழ் பாடநெறியை நிறைவு செய்துள்ளார்.

தேர்தல் காலங்களில் தேர்தல் கண்காணிப்பு பணியில் பெப்ரல் அமைப்போடு இணைந்து தேர்தல் கண்காணிப்பாளராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.

புத்தளம் சவீவபுரத்தில் அமைந்திருக்கின்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி நிலையம் மற்றும் புத்தளம் நகர மண்டபங்களில் அவ்வப்போது நடைபெறுகின்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கூட்டத்தின் போது சிங்கள மொழி மூலமான உரைகளின் தமிழ் மொழிபெயர்ப்பாளராகவும் இவர் கடமையாற்றி வருவதுண்டு.

புத்தளம் மூன்றாம் குறுக்குத்தெரு மௌலா மக்காம் மர்க்கஸ் பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கின்ற, 04.02.1972 இல் ஆரம்பிக்கப்பட்ட புத்தளம் நகரின் தமிழ் மொழி மூலமான முதலாவது முன்பள்ளியான ஐ.எப்.எம். (IFM) முன்பள்ளியில் 1986 ல் இணைந்து முதன் முதலாக தனது முன்பள்ளி ஆசிரியை சேவையை ஆரம்பித்தார்.

ஐ.எப்.எம்.முன்பள்ளியின் அன்றைய கால நிர்வாகியாக இருந்த ஓய்வு பெற்ற அதிபர் மர்ஹூம் ஏ.எம்.எம்.ஹனிபா அவர்களினால் இவருக்கான நியமனம் வழங்கப்பட்டது.

அன்று ஆரம்பித்த இவரது முன்பள்ளி ஆசிரியை சேவை அதே முன்பள்ளியில் 40 வருட காலம் தங்கு தடையின்றி முன்கொண்டு செல்லப்பட்டு சரியாக 40 வருடங்களுக்கு பிறகு தனது சுகயீனம் காரணமாக 14.01.2026 இல் ஓய்வு பெற்றுள்ளார்.

இவரிடம் முன்பள்ளியில் கல்வி பயின்ற மாணவர்கள் இன்று சமூகத்தில் உலமாக்கள், ஆசிரியர்கள், வைத்தியர்கள், அரசியல் பிரமுகர்கள், புத்தி ஜீவிகள் என உயர் பதவிகளை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தவிர இவரிடம் கல்வி பயின்ற பிள்ளைகள், எதிர் காலத்தில் திருமணம் முடித்து
தனது பிள்ளைகளையும் இவரிடம் கல்வி பயில விட்டமையும் விஷேட அம்சமாகும். ஆக இரு தலை முறையினருக்கு முன்பள்ளி கல்வி போதித்த பெருமை இவரை சாரும்.

இவருடைய சேவை காலத்தில், புத்தளம் நகர சபையினால் அன்றைய நகர பிதாக்களான மர்ஹூம் கே.ஏ. பாயிஸ், எம்.எஸ்.எம்.ரபீக் தலைமையில் வருடாந்தம் நடைபெற்று வந்த முன் பள்ளிகளுக்கிடையிலான “டைனி டொட்ஸ்” விளையாட்டுப் பெருவிழா போட்டிகளில் ஐ.எப்.எம். முன்பள்ளி மாணவர்கள் இவருடைய அதீத பயிற்சியின் நிமித்தம் கலந்து கொண்டு பல சம்பியன் மகுடங்களை சுவீகரித்துள்ளனர்.

இவரது முன்பள்ளியின் வருடாந்த கலைவிழா மற்றும் “மா” , “பலா” ஆகிய இரு இல்லங்களுக்கிடையிலான இல்ல விளையாட்டு போட்டி வைபவங்களில்
இனம், மதம், கட்சிகள், இயக்கங்கள் என பாராது அதிகள் பலர் கலந்து கொள்கின்றமையும், அவர்கள் அனைவரையும் பேதங்கள் கலைந்து ஒரே மேடைக்கு கொண்டு சேர்ப்பதும் இவருக்கேயுள்ள தனிச்சிறப்பாகும்.

புத்தளம் மாநகர சபை மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத், மாநகர சபையின் சமூக அபிவிருத்தி அதிகாரி ரதி பிரதீப் மற்றும் முன்பள்ளிகளுக்கு பொறுப்பான அதிகாரி தயானி ஆகியோர், முன்பள்ளிகள் தொடர்பாக எடுக்கின்ற சகல அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகளுக்கும் பக்க பலமாக நின்று இவர் ஒத்தாசைகளை வழங்கி வருபவர்.

இவர் ஓய்வு பெற்றதை அறிந்த இவரிடம் கல்வி கற்ற பழைய மாணவர்களும், பெற்றார்களும் இவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருவதோடு இவர் ஆற்றிய சேவைகளுக்காக பிரார்த்தனைகளும் புரிந்த வண்ணம் உள்ளனர்.

2026 ஜனவரியில் 54 வது வருடத்தில் கால் பதிக்கும் ஐ.எப்.எம்.முன்பள்ளி, ஓய்வு பெற்றுள்ள ஆசிரியை ரூசி சனூனின் அனுபவம், ஆற்றல், வழிகாட்டல், ஆலோசனையின் பேரில் துணை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு புதுத்தெம்புடன் வீறு கொண்டெழுந்து புத்துணர்ச்சியோடு மென்மேலும் சேவைகளை வழங்க வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

வரலாற்றைத் தேடும் வாசகர்களுக்கு ஓர் சிறந்த வாய்ப்பு: சென்னை புத்தகக் கண்காட்சி வளாகத்தில்..!

உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் லிபியாவை சேர்ந்த கலாநிதி அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும்...

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...