கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக சீனா சென்ற கனடா பிரதமர்!

Date:

சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்கை கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று ( 16) நேரில் சந்தித்து உரையாடியுள்ளர்.

கனடா நாட்டின் பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தில், தலைநகர் பெய்ஜிங்கில் சீன ஜனாதிபதி மார்க் கார்னியை அவர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளில், கனடா பிரதமர் ஒருவர் முதல்முறையாக சீனாவுக்குச் சென்றுள்ள நிலையில், விவசாயம், எரிசக்தி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

சீனா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் வர்த்தக ரீதியாகத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் சூழலில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்துள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

அமெரிக்காவைச் சாராத பொருளாதாரத்தை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டு வருவதாகக் கூறிய கனடா பிரதமர் கார்னி இந்தப் பயணத்தில், முன்னணி சீன நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

Popular

More like this
Related

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வரண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...