Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21014 articles
  1. உள்ளூர்

    அனர்த்தங்களை அறிவிக்க விசேட இலக்கங்கள்

    சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட நிலையில் மக்கள் தாம் எதிர்கொண்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து அறிவிப்பதற்கு விசேட தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 47 பொலிஸ் பிரிவுகளின் செயற்பாட்டு மையங்களுக்கு தகவல்களை தெரிவிக்க முடியும். குறித்த செயற்பாட்டு மையங்களின் தொலைபேசி இலக்கங்கள்.

  2. உள்ளூர்

    சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு மாலைதீவு நிதியுதவி!

    இலங்கைக்கு வெள்ள நிவாரணமாக நிதியுதவிகளை விரிவுபடுத்த மாலைதீவு அரசு தீர்மானித்துள்ளது. இதற்கமைய 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை நிதியாவும் 25 ஆயிரம் டின் மீன்கள் தொகையையும் நிவாரணமாக வழங்க மாலைதீவு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மனிதாபிமான மற்றும் மீட்பு உதவிகளை மாலைதீவு மக்கள் சார்பாக…

  3. உள்ளூர்

    அரநாயக்க, அம்பலாங்கந்தை பகுதியில் மண்சரிவில் சிக்கி 120 பேர் மாயம்!

    அரநாயக்க அம்பலாங்கந்தை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 120 பேரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் 20 குழந்தைகளும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மண்சரிவு காரணமாக சிக்கியுள்ளவர்களை மீட்பதில் சிரமம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

  4. உள்ளூர்

    அவசர அனர்த்த நிலைமை தொடர்பில் தகவல்களை வழங்க விசேட செயல்பாட்டுப் பிரிவு

    அவசரகால அனர்த்த நிலைமை குறித்த தகவல்களை வழங்க பொலிஸ் தலைமையக விசேட செயல்பாட்டு பிரிவு நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக, பல பகுதிகளில் பலத்த மழை, வெள்ளம், பலத்த காற்று மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டகளை வெளியேற்ற அறிவிப்புகள்…

  5. உள்ளூர்

    கலா ஓயா வெள்ளப் பெருக்கில் சிக்கிய பஸ்ஸில் 40 பேர் மீட்பு

    அநுராதபுரம் – புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களில் 40 பேர் தற்சமயம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பாக மீட்கப்பட்டவர்கள் நொச்சியாகம வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்படவுள்ளனர்.…

  6. உள்ளூர்

    குடிநீர் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

    களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையம் பாதிப்பை எதிர்கொள்ளும் அவதான நிலையிலுள்ளது. நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதனால் வீடுகளில் நீரை சேமித்து வைக்குமாறு கொழும்பு மற்றும் அதனை அண்மித்ததாக சனநெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் வசிக்கும்…

  7. உள்ளூர்

    இந்திய அரசாங்கம் வழங்கிய நன்கொடைகள் இலங்கை வந்தடைந்துள்ளது !

    நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக இந்திய நிவாரண உதவி விமானம் இலங்கை வந்தடைந்தது. நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்க நிவாரண பொருட்களை ஏற்றிச் வந்த இந்திய விமானப்படையின் C-130 விமானம் (29) இன்று அதிகாலை 01.45…

  8. உள்ளூர்

    டிட்வா புயல் இன்றுடன் முழுமையாக இலங்கையை விட்டு விலகும்!

    டிட்வா புயல் (29) சனிக்கிழமை காலை 8.00 மணி நிலைவரப்படி, ஏற்கனவே குறிப்பிட்டவாறு தற்போது சுண்டிக்குளத்தில் மையம் கொண்டு கடலுக்குள் சென்று கொண்டிருக்கின்றது. (காலை 8.00 மணி) மையத்தின் 30 வீதமான பகுதி கடலுக்குள் சென்றுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்…

  9. உள்ளூர்

    பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு தங்குமிடமாக மற்றுவதற்கு நடவடிக்கை

    கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு தங்குமிடம் மற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிராந்திய மேம்பாட்டுக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் பாதகமான வானிலை குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…

  10. உள்ளூர்

    24 மணித்தியாலயத்தில் கொழும்பு நகருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

    நீர்ப்பாசனத் திணைக்களம், சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய வெள்ளத்தால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கொழும்பு மூழ்கும் அபாயத்தில் இருப்பதாக எச்சரித்துள்ளது. களனி நதிப் பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் விரைவில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான நீர்ப்பாசன இயக்குநர்…