புகையிரத சாரதிகளின் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல புகையிரத தொழிற்சங்கங்கள் இணைந்து, பணிப் பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளன.
கணக்காய்வு சட்டத்திற்கு அமைய, புகையிரத சேவைகளின் போது, இடம்பெறுகின்ற நட்டத்தை, புகையிரத ஊழியர்களிடமிருந்து அறவிட்டுக் கொள்கின்றமைக்கு எதிராக இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவிக்கின்றார்.
இந்த விடயம் தொடர்பில் புகையிரத ஊழியர்களுடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்று வருவதாக அவர் மேலும் கூறுகின்றார்.