இலங்கைக்கு சீனாவிடம் இருந்து நன்கொடையாக கிடைக்கப்பெற்ற 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசியில் இருந்து 375,000 தடுப்பூசிகளை இரண்டாவது சொட்டு வழங்குவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் மிகுதியான 125,000 தடுப்பூசிகள் காலி, மாத்தறை மற்றும் குருணாகல் மாவட்ட மக்களுக்கு செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.