இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளன.சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை என்பன அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இணைய வழி மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.