அவசரமாக தரையிறக்கப்பட்ட இலங்கை விமானப் படையின் செஸ்னா 150 ரக விமானம்

Date:

தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதனால் அதில் பயணித்த இரு விமானிகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என விமானப்படை பேச்சாளர், க்ரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

விமானிகளுக்கான அடிப்படை பயிற்சிக்காக இந்த வகை விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இன்று காலை 10.22 மணிக்கு சீனக்குடா விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட இவ்விமானம் 10.48 மணியளவில் தரையிறக்கப்பட்டது.
இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விமானப்படை கமாண்டர், எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண அறிவுறுத்தியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...