கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சடலத்தை ஹட்டனில் இருந்து ஓட்டமாவடி பகுதிக்கு கொண்டு செல்லும் வாகனத்திற்கான பாதுகாப்பை வழங்கிய காவல்துறை சிற்றுந்து, ஹட்டன் – கினிகத்தேனை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று காலை (05) நடந்த இந்த விபத்தில் சிற்றுந்தில் பயணித்த உப காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை அவருடன் பயணித்த ஏனைய காவல்துறை அதிகாரிகள் மூவரும் அதில் பயணித்த ஏனைய மூவருமென ஆறுபேர் காயமடைந்த நிலையில் வட்டவளை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.