நாட்டில் அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாட்டை மீறி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி 3 அதி சொகுசு பேருந்துகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் செங்கலடி – பதுளை வீதியில் உள்ள இராணுவ சோதனை சாவடியில் இருந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால் குறித்த பேருந்துகள் சோதனையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது குறித்த பேருந்துகளுக்கு மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கான எவ்வித அனுமதிப்பத்தரமும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
பின்னர் பேருந்தில் பயணித்த பயணிகள் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அதில் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், தொற்றாளர்கள் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.