T20 Updates: தீர்மானம் மிக்க போட்டி இன்று; முதலாவது அரையிறுதியில் களமிறங்கவுள்ள நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள்!

Date:

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று (10) முதலாவது அரையிறுதிப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.முதலாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன.ஷெய்க் ஸெய்ட் அபுதாபி மைதானத்தில் இலங்கை இந்திய நேரப்படி இரவு 7.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.

நியூசிலாந்தை பொறுத்தவரையில் 2007,2016 ஆம் ஆண்டுகளில் அரையிறுதி வரை முன்னேறி தோல்வியை தழுவியிருந்தது.எனவே இம் முறை இறுதிப் போட்டிக்குள் நுழைவதற்கு நியூசிலாந்து கடுமையாக போராடும் என கிரிக்கெட் இரசிகர்கள் மத்தியில் கருத்து நிலவுகின்றது.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் 2010 ஆம் ஆண்டின் உலகக் கிண்ண செம்பியன்களாக திகழ்கின்றனர்.இந்த முறை கிண்ணத்தை கைப்பற்றும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் மிக விறு விறுப்பாக நடைபெற்று வருகின்ற இத் தொடரில் குழு 1 லிருந்து இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளும் ,குழு 2 லிருந்து பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

நாளை (11)இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

மார்ச் 01 முதல் போதைப்பொருள் ஒழிப்பு வாரம்!

2026 மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தை “போதைப்பொருள் ஒழிப்பு...

காலி குற்றவியல் பிரிவில் ஒப்படைக்கப்பட்ட ‘பொடி லெஸி’

இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட ‘பொடி லெஸி’ காலி குற்றவியல் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பிணையில்...

‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிவாரணம்!

கடந்த ஆண்டின் இறுதியில் நாட்டைத் தாக்கிய ‘திட்வா’ (Ditwa) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட...

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும்

நாட்டில் இன்று (27) பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என...