கொழும்பு-கண்டி புகையிரத சேவைகள் இன்று முதல் ஆரம்பம்!

Date:

கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக புகையிரத பாதிப்படைந்ததால் இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – கண்டி புகையிரத சேவைகள் இன்று (22) மீண்டும் ஆரம்பமாகிறது.

நாட்டில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக மலையக புகையிரத பாதையில் சில இடங்கள் தாழிறங்கியிருந்தன. பதுளை தொடக்கம் நானுஓயா வரையில் பல இடங்களில் இவ்வாறான நிலை ஏற்பட்டிருந்ததாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

அவை தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாகவும். ரம்புக்கனை புகையிரத நிலையத்தில் தண்டவாளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு சீர் செய்யப்பட்டுள்ளதாகவும் ,இதன் காரணமாக இன்று (22)தொடக்கம் ரயில் சேவையை மேற்கொள்ள முடியும் என்றும் பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

நிதி மோசடி குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது!

அதிகாரப்பூர்வ மென்பொருள் நிறுவலுடன் தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு...

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு II ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு...

சுங்கத் திணைக்களம் 1 டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டியது!

2026 ஆம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை நேற்று முன்தினம் எட்டியுள்ளதாக...