தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஒன்றிணைந்து செயற்படும் எண்ணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான இரண்டாம் கட்ட சந்திப்பு இன்று (12) கொழும்பில் முற்பகல் 10.30 ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமகாலத்தில் சிறுபான்மை கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் , அதிகளவான கட்சிகள் பங்கேற்கும் சந்திப்பாக இக் கூட்டம் அமைகின்றது.